சாமியார்கள் போலி சாமியார்கள்

காதினிலே குண்டலம் ஆட,
கனத்த சாரீரம் பாட,
காய்ச்சிய பால் தொண்டையில் ஓட,
கண்கள் கதியற்று கன்னியரை நாட..
அறிஞர் அண்ணா அவர்களின் வரிகளை
இன்று நிஜமாக்கும் நிகழ்வுகள் !

தன்னம்பிக்கையை தளர்த்தும்
மூட நம்பிக்கை !

பிச்சை வாங்கவேண்டியவர்கள்
பிச்சை போடும் வினோதம் ,
அம்மா தாயே என்றவர்களை ,
நாம் கடவுள் என்றால் என்னவாகும் !

நிஜ அரக்கர்களின் போலி வேடம் !
சமூக விரோதிகளின் காவித்திரை ,
கொலை கொள்ளைக்காரர்களின்
அந்தப்புரம் ,
வெறுக்கதக்கவர்கள் கையில்
வணங்கத்தக்கவர்கள் பதவி !

கடவுள்கள் குளித்த குளத்தில்
இன்று சாக்கடைகளின் நீராடல் !
வெட்கக்கேடு ,
படைத்தவனுக்கே வந்த பரிச்சை,
திமிரும் போலிச்சாமியார்கள்
திணறும் மடங்கள் !

அன்று ஆண்டவன் திருவிளையாடல் ,
இன்று இவர்களின் திருட்டு விளையாடல் ,
வித்தைக்காரர்களின் மாயவித்தை ,
அவர்கள் காட்டும் சர்க்கஸ் வித்தையில்
பார்வையாளர்களாக நம்மில் சிலர் !

உலகம் துறந்தவனுக்கு
ஊரெல்லாம் கொட்டி கொடுக்குது
கோடி கோடியாய்,
நடை பயணம் செல்லவேண்டியவன்,
ரதத்தில் ஊர்வலம் ,
தங்கத்தில் கட்டில் ,வைரத்தில் கிரீடம் !

கருவறையில் இருப்பவர்களின்
கழிவறை சிந்தனை ,
கசாப்பு கடைக்காரனை நம்பும்
ஆட்டு பரம்பரைகள் !

வேத சூழ்ச்சமங்கள் ஒலிக்க வேண்டிய இடத்தில்
காம கள்ளபங்கள் ,
ஊதுபத்தி வாசனைக்குபதில்
மதுவாசனை !

நம் பாதங்கள் பழுதுபடாமல்
பாதுகாக்கும் செருப்பு ,
நம் வீட்டை தூய்மையாக வைக்கும்
துடப்பம் கூட ,
சுகபோக வாழ்வில் மூழ்கி திளைக்கும்
சாமியார்களை காட்டிலும்
மரியாதைக்குரியவை !

கெட்ட நடவடிக்கைகள்
வெட்ட வெளிச்சமாகும்
அன்று கல்லைகூட தெய்வமாக வணங்கியவன்
கல்லெடுக்க ஆரம்பிப்பான் !

இது கலியுகம் ,
இன்று நிஜ சாமிகளை பார்க்க முடியாது ,
போலிச்சாமியார்களை தவிர ,
நிஜத்தை புரிந்துகொள்வோம் ,
போலிகளை ஒழிப்போம் ,
போலி சாமியார்களையும் ஒழிப்போம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Jun-12, 8:07 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 262

மேலே