தேவை ஒரு விவசாய புரட்சி... (கவிதை திருவிழா )

மூன்று வேளை உழைக்காமல்
உண்ணும் கடவுளை விட
முப்போகம் விளைய செய்யும் விவசாயி
நீயே முதலானவன்
உலகிற்கே படி அளப்பவன்
எதை அளக்கிறதாக சொல்கிறார்கள்
உணவைத்தானே
அப்போ அவன் உழவந்தானே
விவசாயி மகன் விவசாயி
என்ன அவமானம்
கடவுள் மகன் கடவுள்தானே
நீ விரிந்த நிலத்தில் அகன்று விதை போடு
சோற்றிலே கை வைக்கும் முன்
சேற்றிலே கால் பதிததோமா நாம்
விதைக்காமல் அறுப்பது திருட்டு
விதைத்ததை அறுப்பவன் நீ மட்டுமே
அரசனுக்கும் ஆண்டிக்கும்
ஒரே ஒற்றுமை ஒரு சான் வயறு
அவ்வப்போது வயிற்றுக்கு உணவு
அது இல்லாது அரசன் எங்கே ஆண்டி எங்கே
பணம் கொடுத்தால்
எதையும் வாங்கலாம்
எதை கொடுத்து பசியேய் அடக்குவது
உணவே அதை மறந்து விடாதே
விவசாய நிலம் விற்று
கல்வி போதித்தாய் தவறில்லை
விதை எங்கே போடுவது
உன் அடுத்த தலைமுறை உணர்ந்தாயா
சேற்றிலே கால் வைத்தால்
சோற்றிலே கை வைக்கலாம்
சேற்றிலே வைப்பவர்கள் குறைந்து போனால்
தட்டிலே சோறு குறையும் முற்றிலுமாக
விதைப்பவன் விவசாயி
அறுப்பவன் அவனே
அவனுக்கே இல்லை மூன்று வேளை
முழுமையாய் உணவு யோசித்தாயா மனிதா
விவசாயம் செய்ய இலவச மின்சாரம்
ஏன் தரக்கூடாது அவனுக்கு
இலவசமாக விதைகள் , உரம் , பூச்சிகொல்லி
இலவச ஆலோசனை மட்டும் என்ன செய்துவிடும்
நமக்கான அரிசியில் அரசியல்
நாமே எழுதுவோம் நம் பெயரை
உழவு செய் உழவனுக்கு உதவி செய் அதுவே
நமக்கு தேவையான விவசாய புரட்சி