!!! எனது அன்பிற்கினிய தோழமைகளுக்கு !!!

வணக்கம் தோழமைகளே....

நான் விபரம் தெரிந்த நாள் முதல் இன்றுவரை பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதில் எனக்கு விருப்பமும் இல்லை, பிறந்த நாளிற்காக நான் புது ஆடை அணிந்ததில்லை, குடும்பத்தோடு கோவிலுக்கோ, நண்பர்களோடு தியேட்டருக்கோ போனதில்லை, ஊரில் உள்ளவர்களுக்கும், சொந்தபந்தங்களுக்கும் இனிப்புகள் வழங்கியதில்லை, கேக் வெட்டி சந்தோசபட்டதில்லை, அன்று என் பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுகொள்வேன் அதுமட்டும்தான் எனக்கு பிடித்த சந்தோசம், கடந்த இந்த ஓராண்டுக்கான இறந்தகால எனது வாழ்க்கையையும், இந்த ஓராண்டில் என்ன சாதித்தோம் என்பதையும் நினைத்து பார்ப்பேன் அவ்வளவுதான் எனது பிறந்த நாள்.

எனது இந்த பிறந்தநாளை நான் யாருக்கும் சொல்லவில்லை, தோழர் திரு அருண்குமார் அவர்கள் எனது Facebook ல் பார்த்துவிட்டார் போல் இருக்கிறது, அவர் கவிதைகளால் எழுத்து. காம் மூலம் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
தோழர் திரு ரௌத்திரன் அவர்களும்
அன்பு தம்பி திரு ஈஸ்வர் தனிகாட்டு ராஜா அவர்களும்
கவிதைகளால் என்னை வாழ்த்தி என் அகம் மகிழ செய்தார்கள்,
அய்யா திரு Dr . கன்னியப்பன் அவர்களும்
அய்யா திரு காளியப்பன் எசக்கியேல் அவர்களும்
அய்யா திரு புதுவை காயத்ரி அவர்களும்
அண்ணன் திரு மு. ராமச்சந்திரன் அவர்களும்
தோழி கவிதாயினி அவர்களும்
தோழி லலிதா விஜயகுமார் அவர்களும்
தோழி பிரியாராம் அவர்களும்
தோழர் A . பிரேம்குமார் அவர்களும்
என் அகம் மகிழ வாழ்த்தினார்கள்.

வாழ்த்துகூரியவர்களுக்கு நன்றி கூறுவது நம் தமிழர் பண்பாடு என்பதால் நானும் நன்றிகூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

வாழ்த்தி வரம்கொடுத்த
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
சிரம்தாழ்த்து கரம்கூப்பி
எனது பணிவான
நன்றியினை உரித்தாக்குகிறேன்....

என்றும் உங்கள் தோழமைக்காய்....
நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (16-Jun-12, 9:46 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 222

மேலே