உனக்காக

இரவு
விரதம் கொள்ளட்டும்
நினைவில்
ஒரு சமர் செய்வாயென்று!!!!
என்
வயது வந்த
கவிதையொன்று
உன் கண்ணுக்குள்
புதைந்து விட்டது!!!
நொடிக்கொருமுறை
இருளை ரசிக்கின்றேன்
நீ
ஒரு முறையாவது
திருடியாய்
வந்துவிடு........!!!
உனக்காக
நிலவு
காத்திருக்கிறது
உன்னை
அரவம் தீண்டாமல்
கனவில்
சேர்ப்பதற்கு வந்துவிடு
என்
இதயத்தில் ஒரு
கீறல் போட்டு
உன் பெயரை
முத்தங்களால்
முத்திரையிடு!!!!!!
என்
குருதித்துணிக்கைகளில்
கரைந்து
காயப்படுத்துகையில்
உன் வார்த்தைகள்போல
சுகமாகிறது!!!
கவிஞனாய்
இருந்தால்
வார்த்தைகளால்
குளிக்கச்செய்திருப்பேன்
உன்
அத்தனை நடைமுறைகளையும்
தேரேற்றி வருகின்ற
வாசகனாய் வாசம்
செய்கின்றேன்........
ஆனாலும்
பெண்ணே உன் நினைவில்
என் மனம் தாகமாய் இருக்க
அவன் நினைவில் தவமாய்
இருக்கிறாய்......