நெஞ்சனைய தமிழ் இருக்க

செந்தமிழ் சுவைத்தேன்
செங்கரும்பு எனக்கேன் ?

திண்ணை தமிழ் படிப்பதற்கு
தின்ன திணை எனக்கெதற்கு?

முத்தமிழ் சாரம் இருக்கு
முக்கனி சாறெதுக்கு?

நெஞ்சனைய தமிழ் இருக்க
பஞ்சணையில் சுகம் இருக்கா?

கிள்ளை தமிழ் மழலையினும்
கொத்தும் கிளி பேச்சழகா?

கோவை இதழ் வாய் மலர்ந்து
பாவை தமிழ் பா வரைந்தாள் !

செந்தாமரை இதழ் கவிந்தாள்
தாழ் இதழ் தாமரை தாள்!

எழுதியவர் : (28-Jun-12, 4:59 am)
பார்வை : 179

மேலே