உலகச் செம்மொழி தமிழ்தான்

ஈழத்தில் தமிழன் செத்த வேளையில்
பாடை கட்ட நினைத்தோம் கோவையில்
செத்த செம்மொழி பாடையில்
செத்த செம்மொழி பாடையில்

பிழைத்தது செந்தமிழ் நல்ல வேளையில்
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
அது ஒரு தலை முடிபு
அண்டமே பதில் சொல்
செம்மொழி விற்பனைக்கு வர விலையா?
செந்தமிழுக்கு செம்மொழி அடையா- இல்லை
செம்மொழிக்கு தீந்தமிழ் போடஉடையா-
எந்தமிழரானாலும் மொழி முறை விடையா.
செம்மொழி மாநாடு
செம்மொழி எவனுக்கு தாய்மொழி?
செப்புக தமிழரே எனக்கு!
செம்மொழி எவனுக்கு தாய்மொழி?

தாய்மொழி தமிழை மறந்தாயே
அதுதான் கேடு.

உலகத் தமிழ் மாநாடு- தஞ்சையில்
அப்பொழுது தமிழ் பச்சை சேலையில்
கொஞ்சம் தடித்து இருத்தது- ஆனால் நின்றது
அந்த தமிழை
எப்புலவனும் அப்ப அம்மா தமிழில் பாடினான்
அம்மா தான் தமிழென கூவினான்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-கோவையில்
இப்பொழுது வெளிர் மங்கல பட்டுடுத்தி - தமிழ்
அடர் மஞ்சள் துண்டும் மேலுடுத்தி - இளைத்து
அமர்ந்திருந்தது சக்கர நாற்காலியில்.
வீல் வீல் அடுக்கு மொழி எடுத்தான் புலவன்
வீல் தமிழா? என்றான் ஒரு தமிழன்
வீல் தமிழில்லை என்றாலும்
வீலில் தமிழ் தானே?
பின்பு கால் கால் என்றான்
கால் இல்லாமல் தானே வீல்
என்றது தமிழ்
இல்லை மன்னா
உங்கள் கைபேசி!

காலும் தமிழா?
வீலும் தமிழா?
இப்படியே வாழும் தமிழா
நாளும் தமிழ்
வீழும் தமிழா
உழுத தமிழ் நிலத்தில்
ஆங்கில களையை நீக்கு!

இந்த தமிழை
லாலி பாட வாலி
மழையில் நனைக்க உணர்வை மடை மாற்றி
கவி வைரமுத்து! பிழை
கருத்தால் நெஞ்சையறுத்தார்
அடடா ஈழத்து எழவை மறந்து
களித்த நல்ல புதிய ஏற்பாடு

வடக்கு வழங்கிய ஆசனத்தில்
பெற்ற மொத்த குடும்பமும்
வசதியாய் முன்வரிசையில்!
தமிழ் ரசிக்க
அங்கு போகாதவன்
தேறுகிற தமிழன் இல்லை
தமிழ் இப்படியும் பேசிய விந்தை!

தொண்மொழி தொடர் மொழி உலகின்
முதல் மொழி, நிலை பெற்று வரு மொழி
தேன் மொழி, பொதுமறை வள்ளுவம்
வழங்கிய தமிழ் பேரொளி. சூரியகதிரும்
வணங்கும் சுடர் மொழி,தடைகளை யறுத்து,
வலை ஏறி விளையாடும் கணினி மொழி.
குன்றாத இளமை என்றும் எங்கள் தமிழ்
எழில் மொழி.மழலையின் வாய் மொழியும்
தென் தமிழ் மீட்டும் யாழ் மொழி,
சங்க தமிழுக்கு பல்லாயிரம் அடைமொழி.

எலும்பு செம்மொழி துண்டுக்கா
எங்கள் தாய் ஏங்கினாள்!

அட போங்கடா !
உரக்கச் சொல்வேன்.
எவனுக்கும் உரைக்க சொல்வேன்
பறைஅறைந்து,பகை மறந்து
ஆராய்ந்து, முறையாய், சரியாய் பொழிவேன்.

உலகில் தமிழுமொரு செம்மொழியன்று
உலகச் செம்மொழி தமிழ்தான் என்று ஆம்
உலகச் செம்மொழி தமிழ்தான் என்று
உலகச் செம்மொழி தமிழ் மாநாடு என்று?
ஏங்கித் தவிக்கிறேன் தனியாய் நின்று.

கற்க கற்க நற்றமிழ்
காற்றில் செம்மொழி
சேற்றில் எம்மொழியும்
தொலையாது
காக்க காக்க தமிழினம்

எழுதியவர் : (28-Jun-12, 5:17 am)
பார்வை : 334

மேலே