நட்பு

சந்தோஷம் எனும் சத்தியத்தை
சாகும் வரை சூடிக்கொள்ள
உறவுகளுக்கிடையில்
உரிமையாய் பூத்த பூ- நட்பு;

மதம் இல்லா மரபினில்
சொட்டும் மகிழ்ச்சிகள்;
இனம் இல்லா இவைகளில்
ஏது இருட்டுகள்?

கண்ணீர் இல்லா காட்டினில்
தெறிக்கும் சிரிப்புகள்;
துரோகம் இல்லா கூட்டினில்
குவியும் மனசுகள்;

இசையுடன் நடனம் சேர்ந்தால்
கால் குதிக்கலாம்;
நட்புடன் நீ சேர்ந்தால்
கவலை மறக்கலாம்;

உப்பில்லா உணவை கூட
சிலசமயம் உண்ணலாம்;
நட்பில்லா நிம்மதியை
மனம் நினைக்கலாமா?

அவசர பொய்களுக்கும்
ஆஸ்தானமாய் அமையும்;
அவசர தேவைக்கும்
அள்ளி கொடுக்கும்;

பொய்களில்லா உறவினால்
உயிர்கள் பிழைத்தோம்;
பாலமாய் நீ படர்ந்த்தால்
கவலை மறந்தோம்;

புகைப்பிடித்தும் புகைப்படத்திலும்
புன்னகையே பூக்கும்;
குடிபோதை ஆனாலும்
கூடியே நிற்கும்;

தராசு தட்டில் தோழன் வைத்து
உன்னை நீ கணக்கிடலாம்;
இமைகள் ஒன்றில் தோழி வைத்தால்
உன் பார்வை அறியலாம்;

ஆண்களின் நட்பு
ஆயுசு வரைக்கும்;
பெண்களின் நட்பு
புருஷன் வரும் வரைக்கும்;

இது காலத்தின் கட்டாயம்
ஏன்றே தான் ஆனாலும்
காலங்கள் மாறுவதால்
இத்தலையெழுத்தும் மாறத்தான் வேண்டும்;

சிரிக்க வைக்கும் ஒரு தோழன்;
புரிந்து கொள்ளும் ஒரு தோழி
இவையேனும் உனக்கிலையேல்
எழுதியேனும் தருகிறேன்
“இவ்வுலகின் மிகப்பெரிய ஏழை நீயே!!”

எழுதியவர் : Baveethra (1-Jul-12, 6:48 pm)
பார்வை : 1593

மேலே