என் மதிப்புக்குரியவனே.............

நீ:
மறைந்திருந்து என்னை..
செதுக்கிக்கொண்டிருக்கும் ..
என் மதிப்புக்குரியவனே....
உன் வார்த்தைஇல்லாததால் எனக்குகவிதை
எழுத முடியவில்லை....உன் அழைப்பு வராமல்
என் செல் போன் செயல் இழந்து விட்டது

எல்லாமும் கொடுக்க நினைத்தும்
எதுவும் முடியாமல்..நான்
கண்களில் கண்ணீருடன்
கைகளால் கவிதை எழுதமட்டுமே
முடிகின்றது......
கரும்பின் கணுக்களில் கூட
மண்பட்டதும் தான் உயிர் வருமாம்
என் கவிதையின் உயிர் வரிகளின்
கணுக்களை கண்ணுற்றதும்
உயிர்பெறட்டும் உன் அன்பு மலர்

காட்டின கண்கள் வாட்டின மனம்
ஊட்டிநின்ற ஓர் இறப்புசசோகம்....
இக்கவி கண்டதும் அக்கண்மே சென்று
உன் செல் எடுத்து என் எண் டயல் செய்ய
வேண்டும் இந்த ஜென்மம் ஈடேற. உன் அழைப்பில்லாமல் நான் ஒரு முழு நிலவின் அருகில் அமாவாசையாய்...........

எழுதியவர் : கவிதை தேவதை. (30-Jun-12, 2:56 pm)
பார்வை : 554

மேலே