உயர்ந்து பறக்க ஆசை
இரு கைகளுக்குப் பதிலாக
இனிய மயில் தோகை வேண்டும்
இனிய வானில் கழுகெனவே
உயர நானும் பறக்கவேண்டும்...
கண் பார்வையில் கவித் தூரிகை வைத்து
கடல் அலையில் கவி எழுத வேண்டும்....
கற்பனையாய் என் வானம் வேண்டும்
காலமெல்லாம் நான் பறக்க வேண்டும்

