தினம் ஒரு முட்டை

நண்பனே
எழுத்து தளத்தின்
எழுத்தாளனே
எழுது,, நிறைய எழுது...

உன் கவிதையைக்
குப்பை என்பார்கள்
குட் பை சொல்லி விடாதே
மலட்டுக் குப்பையும்
மகுடம் தரிக்கலாம் ..

முட்டை மதிப்பெண்ணை
முடிந்து போனதாக
எண்ணி வருந்தாதே...
முட்டையின் கால்சியம்
உனக்கு அவசியம்
நீ எழுந்து நிற்க....

முட்ட முட்டத் திறக்கும்
நம்பிக்கையுடன்
நிறைய எழுது...
விழுவது இயற்கை
எழுவதே வாழ்க்கை...

சாரத்தோடு சந்தம்
இணைய மறுத்தால்
சங்கடப் படாதே ...

மரபைத் தாண்டி
புதுக்கவிதை
புகவில்லையா?
புதுக்கவிதையிலும்
புதுமை நிகழலாம்...

கவிதையின் கரு சாரம்
அலங்காரம் சந்தம்
சாரத்தோடு பலர் இருக்கலாம்
சந்தத்தோடு சிலர் மட்டுமே...

சந்தத்தோடு
சொந்தம் கொண்டவர்கள்
சாரமின்றி தவிக்கிறார்கள் ..

உன் சாரம்
அவர்களுக்கு உதவலாம்
தமிழ் கவிதை பெருகலாம்
திரை இசையில்
ரீ மிக்சிங் குறையலாம்
புதுப் பாடல் நிறையலாம்

நண்பனே
சந்தத்தோடு இணைய மறுத்த
உன் சாரத்தை வெளித்தள்ளு
தினம் ஒரு முட்டையாக....

சந்தம் ஒட்டும்
கவிதை கிட்டும் வரை...

எழுதியவர் : அலாவுதீன் (6-Jul-12, 5:42 pm)
Tanglish : thinam oru muttai
பார்வை : 544

மேலே