இளமை எனும் காற்று
உண்மைதான்!
உலகம் தோன்றும் முன்
இரவும் நிலவும்
சூரியனும் ஒளியும்
மாயை என்பது!
தேகம் என்றும்
பச்சோந்தி அல்ல!
வானவில் நிறமுமல்ல!
ஆப்பிள் நிறமுமல்ல!
ஆசைகள் என்றும்
ஆசைப் படுவதில்லை
மலரையும் முள்ளையும்
பிரித்துப் பார்க்க!
உப்புக்கு என்றும்
ஒத்து ஓதுவதில்லை
நவரசங்கள்
என்றென்றும் !
அழகு தான்
எப்பொழுதும்
என் இளமை
முதுமையைத்
தொடும் வரையில் !