சுடலை
![](https://eluthu.com/images/loading.gif)
நிழல் பின்தொடர்கிறதா
என்று நாம் பார்த்துக் கொண்டா
போகிறோம்
அனைத்தையும் உள்ளடக்கிய வெளி
சமநிலையோடு இருக்கிறது
தனக்கு எல்லாம் தெரியும் என்கின்ற
மனிதன்
மயானத்திற்குப் போக அழுவதேன்
வெளவால்கள் குடியிருக்கும்
பாழடைந்த கட்டடத்தை போன்று
உன் உள்ளத்தை வைத்துக் கொள்வதேன்
பொல்லாத மனிதர்களுக்கு
சிவஅசரீரி கேட்டால்
இரத்த நாளங்கள் துடிக்கும்
காளியை வதம் செய்த சிவன்
மூர்க்கமானவர்களின் ஆணவத்தை அளிக்கிறான்
கபாலமாலையுடன் அருள்புரியும் சிவன்
உன் கடந்த காலத்தை ஒப்புக்கிறான்
பிரபஞ்சத்தை படைத்த அவன்
பார்வதியுடன் காதல் கொள்கிறான்
பேய்களின் அரசன் அவன் அவன்
கொடியவர்களை அரவமாய் தீண்ட
பூமியில் இறங்குகிறான்.