நடு இரவில் வெயில் அடிக்க 555

பெண்ணே.....
நேசிக்கும் உள்ளம்
உள்ள என்னிடம்...
என்னை வெறுக்க யாரும் இல்லை
என்று நினைத்தேன் நான்...
உடலைவிட்டு பிரியாத
உயிரைப்போல....
நீ இருந்தாய் என்னுடன்...
உன் சுடிதாரில் பட்ட
முள்ளாய் நினைத்து...
தூக்கி எறிந்துவிட்டு
சென்றாய் என்னை...
குளிர்கால அமாவாசை
இருள்கூட...
சுட்டெரிக்கும் சூரியனாய்
இன்று எனக்கு...
நடு இரவில் வெயில் அடிக்கிறது
என்னை தொடர்ந்து.....