ஆயிரம் காதல் கடிதங்கள் (5)
உன் கண்ணைச்
சுற்றியே
என் எல்லைகள்!
(புன்)நகை பூக்கும்
செடி
உன் முகம்!
சொர்கத்தின்
சாவி
உன் புன்னகை!
வினாத்தளோடு வந்த
விடைத்தாள்
உன் பார்வை!
உன்னைச்சுற்றி
விரிகின்றன
என்
எண்ணக் கடல்கள்!
உன் படுக்கைக் கடலில்
உதிக்கிறது
என் சூரியன்!
நீ துயில் கலைக்கும்நேரம்
விடிகிறது
என் வானம்!
உன் பார்வை படும்நேரம்
பற்றுகிறது
என் வனம்!
உன் ஸ்பரிசம் தீண்டும்கனம்
காலக்கோடு தாண்டி
குதிக்கிறது
என் மனம்!
இந்த வியப்பும்
சிலிர்ப்பும்
தேவைதானா? என்றால்
மழையின் குளிர்ச்சியும்,
மலையின் வனப்பும்,
பூக்களின் வாசமும்,
பூவையிடம் கொண்ட நேசமும்
வர்ணிப்புகள் தானே!