துரோகம்
துணைக்கு ஒருவனும்
காவலுக்கு ஒருவனுமாய்
சந்தோஷ களிப்பில் முடிந்தது
அந்த பகல் இரவு...
பலமுறை கற்பு இழந்தவளிடம்
முதல்முறையாய் நான் இழந்தேன்
என்னை அவளிடத்தில்...
அகவை 29 அடக்கி வைத்த
ஆசைகள் யாவும் கரைந்தன
காற்றில் பட்ட சூடம் போல....
முதலாய் உணர்கிறேன்
பெண்ணின் வாசனையை
என் சுவாசக் காற்றில்...
பல தவறுகள்
அரங்கேறி முடிந்தன
அந்த அரங்கேற்ற மேடையில்...
ஆயினும் சந்தோஷ
வானில் பறக்கிறேன்
இதை சிலரிடம் பகிர்கிறேன்
நான் தான்
என் வருங்கால மனைவிக்கு
துரோகம் செய்பவன் ...