என் நிஜங்களைத் தேடிய நாட்கள்

புரிகிறது இருவரின் வாழ்க்கைத்
தடங்களைப் பார்க்கும்போது,
பாதை இன்று வேறாக இருக்கலாம்
காலம் அதை ஒன்றாக இணைக்கும் என்று
எனது நடைபயணம் தொடர்கிறது......
பல ஏற்றங்களையும் சில சறுக்கல்களையும்
இரு மனங்கள் சந்தித்திருந்தாலும்
மாற்றங்கள் பயணத்தில் மட்டும் அல்ல
வாழ்கையிலும் வரும் என்று
அதை ஏற்றுக்கொள்கிறேன்....
காலையும் மாலையும் மாறி
மாறி வந்தாலும் என்
மனம் மட்டும் மாறாமல்
உன்னையே நினைக்கிறது...
இறந்தகாலம் நிகழ்காலமாகி எதிர்காலம்
வந்தாலும் இரு மனமும்
சேர்ந்திருந்த வேளைகளே
எல்லாக் காலமுமாய் மாறுகிறது....
என் சுவாசக் காற்றைக்கூட உன்
உயிர்க்காற்றுக்காக நிறுதிவைக்கிறேன்
அதற்காக என் இதயத் துடிப்பை
விலை கேட்காதே!

எழுதியவர் : Tamizhmagal (25-Jul-12, 9:17 pm)
பார்வை : 184

மேலே