யார் சொல்ல வேண்டும் கதை ?
இரண்டு இள நண்பர்களின் உரையாடல் :
"என்னடா எழுத்து என்னடா கவிதை ? "
"ஏன்டா இப்படி அலுத்துக்கறே ?
" பின்ன என்ன என்னடா இந்த தலைப்பு ?
---பாட்டி சொன்ன கதை
"பின்ன தாத்தா சொன்ன கதைன்னு வைக்கணுமா?"
" போடா .... புண்ணாக்கு "
"பின்ன ...அம்மா சொன்ன கதை அப்பா சொன்ன
கதை தோழி சொன்ன கதை சினேகிதி சொன்ன
கதை கிளி சொன்ன கதை காக்காய் சொன்ன
கதை குருவி சொன்ன கதை ...
"ஏய் ஏய் நிறுத்துடா ...விட்டா ரயில் வண்டி மாறி
போய்கிட்டே இருக்க "
" பின்ன பட்டி விக்கிரமாதித்தன் கதைன்னு
வைக்க்கலாம்ன்கிறையா ...இதென்ன அம்புலி
மாமாவா ?"
" சும்மா இருடா ...இப்படி வச்சா எப்பிடி
இருக்கும் டா ?"
"எப்படிடா ?"
"அதான் டா... கொஞ்சம் கற்பனை பண்ணிப்
பாருடா ஆஹா ...என்னமா இருக்கும் "
"மாப்ளே ரொம்ப பில்டப் கொடுக்காதடா
சீக்கிரம் சொல்லுடா "
"என்ன அழகான தலைப்பு.. காதலி சொன்ன கதை "
"மாப்ளே கொன்னுட்டேடா தலைப்பு டக்கர்"
"வச்சிருக்கியா ?"
"ஒண்ணா ரெண்டா
ஒன்னொன்னும் ஒரு அனுபவம்
இந்தக் கன்னங்கள் சொல்லும்
இந்தக் கைகள் எழுதும்"
" அண்ணே மச்சி சொல்லுது காதுல
விழுந்திச்சா ?
கன்னம் சிவந்த காதல் வரிகள் ...."
----கவின் சாரலன்