(பிறந்தநாள்) வாழ்த்து.

* அத்தனை சோகங்களையும்
விட்டெரியும் விடியலின்
துவக்கம் இன்று .

* வலிகளனைத்தையும் வடிகட்டி
உனக்கே உரமாக்க
ஆரம்பிக்க நேரம்வந்தது.

* சோதனைகளும்,வேதனைகளும் ,
சாதனை மின்தூக்கியாய்
செயல்படும் நாள்
வந்தது உனக்கு

* திசைமாறும் காலமிது

* திருப்புமுனை நேரமிது

* தோழமையுடன் வாழ்த்துசொல்ல
தருணம் தேடுகையில்
இணைந்து வந்தது
இன்றைய நாள்
உன் பிறந்தநாளாய்...

* வாழ்த்துகிறேன், மனம்திறந்து
ஜீவித்த நாள் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : அருண் தில்லைச்சதம்பரம். (9-Aug-12, 11:01 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 447

மேலே