"இந்திய வரிசை பட்டியல்"kavipriyan
![](https://eluthu.com/images/loading.gif)
அடடா.....!
இந்தியாவில்
மக்கள் வரிசை அமோகம்....
நகைக்கடையில்
நான்கு மீட்டருக்கு மக்கள்....
ATM மையத்தில்
ஐந்து மீட்டருக்கு மக்கள்....
வங்கியில்
பத்து மீட்டருக்கு மக்கள்....
ஜவுளிக்கடையில்
பனிரெண்டு மீட்டருக்கு மக்கள்....
உணவுக்கடையில்
பதினைந்து மீட்டருக்கு மக்கள்....
ஞாயவிலைகடையில்
இருபது மீட்டருக்கு மக்கள்....
மதுக்கடையில் மட்டும்
இருநூறு மீட்டருக்கு குடிமக்கள்....!
அடடா என்ன விற்பனை இந்தியாவில்...!
by
kavipriyan