"ஒலிம்பிக்கில் தங்கம் வேண்டுமா"

இந்தியாவில்
நகைக்கடைக்க
பஞ்சம்.....
ஒரு பவுன் தங்கம்
ஒரு லட்சம் என்றாலும்
திருமணத்திற்கு
ஐம்பது பவுன் தங்கம் வாங்கும்
மனிதர்கள் வாழும் நாடு இது.....
ஒலிம்பிக்கில்
ஒரு தங்கம் வாங்க வக்கில்லையா...
நூற்றிஇருவது கோடியில்
ஒருவருமா இல்லை...
ஆயிரக்கணக்கில் உள்ளன.......
பணம் பதவி எனும்
வலையில் சிக்கிக்கொண்டு..........
இந்தியாவின் மீது
பற்று உள்ளவன்
இந்தியாவிற்காக நம் நாட்டு
வீரர்களிடம் திறமையை மட்டும்
காணவேண்டும் பணத்தையோ,
பதவியையோ,பரிந்துரையையோ,
உறவையோ கண்டால்
இன்று மட்டும் அல்ல
என்றும்
தங்கக் கனவு மட்டுமே
சொந்தம் இந்தியாவுக்கு.....
உங்களால் விடுவிக்க முடியுமா
சிறந்த வீரர்களை.....
ஒலிம்பிக்கில் பதக்கமெல்லாம்
நமக்கே சொந்தம்......
உலகக்கோப்பையை
நிரந்தரமாக உறங்கவிடுவோம்
இந்தியாவில்........!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (10-Aug-12, 10:02 am)
பார்வை : 224

மேலே