படைப்பாளிகளின் கவனத்திற்கு-பகுதி :5 (அலிநகர் அஹமது அலியின் காதல் படலா சமூகப் பாடலா??

அன்பு நிறை அஹமது அலி,
............பாருங்கள் ....நீங்களே சொல்லி விட்டீர்கள்...காதல் ஒரு "படல்" என்று....... அதாவது தடை-வேலி ....

ஆனால் நீங்களே கூறிவிட்டீர்கள் சமுதாயம் ஒரு பாடல் என்று....
காதலைப்பற்றி பாடும் போது தான் எத்தனை தடுமாற்றம் ...(எழுத்துப்பிழைகள் !!) ஆனால் சமூகப் பாடலான "மீனவர் பாட்டு "படைத்த அகமது அலி அதில் தடுமாறவே இல்லையே...

இலக்கணம் இல்லா இலக்கியமும் இல்லை...இலக்கியம் அற்ற மொழியும் கிடையாது...

உலகில் இன்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் அடையாளமற்று கிடக்கின்றன. 700 பாஷைகள் மெக்சிகோவில் பேசப்படுகின்றன..அந்த ஆதிக்குடிகள் பேசும் மொழியின் பெயர் இன்னமும் வகைப்படுத்தப்படவில்லை... ஆங்கிலமும் ச்பானிஷும் பேசிட மக்களைக் கட்டாயப்படுத்திடவும் அடிப்படை உரிமைகளைப்பரித்து நிலங்களிலிருந்து விரட்டி அழித்தொழிப்பதற்கு அரசு அதிகாரம் முற்பட்டப்போது அந்த மக்களுக்காக அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடும் இயக்கங்களுக்குப் பின்புலமாக செயல்பட்டது சமூகப்பிரக்ஞை கொண்ட இரு எழுத்தாளர்களை இன்னமும் மக்கள் கொண்டாடுகின்றனரே...

அந்த எழுத்தாளர்கள் தான் ஆக்டோவியா பாஸ் மற்றும் கார்லோஸ் புயண்டஸ்...இவர்களில் ஆக்டோவியா பாஸ் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திற்காக நோபல் பரிசு வென்றவர்...!

சிலி நாட்டு சுரங்கத் தொழிலாளர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த் பாப்லோ நெருடா நோபல் பரிசு வென்றவர்...! இலங்கையின் சிலி நாட்டுத் தூதுவராகவும் இருந்தவர்...அப்போது அங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் துயர் அறிந்து அவர்களுக்கும் குரல் கொடுத்தவர்...

சமூக அவலம் தான் பலரின் சிக்கல் அதற்குத்தான் இன்றைய தலைமுறை அதிக சிந்தனையையும் சக்தியையும் செலவழிக்க வேண்டும்...

காதலிகள் இருப்பதும் ஒரு சமூகத்தில் தானே...காதல் அரும்புவது வளர்வது,-வளைவது எல்லாம் ஒரு சமூகத்தில்தானே...நல்ல உடலுக்கு ஏற்ற உடையும் ,நல்ல உடைக்கேற்ற உடலும் வேண்டும் தானே..

எந்த மனிதனும் காதலுக்கு எதிரி இல்லை...ஒரு படைப்பாளி முதலில் மனிதன் ---பின்னரே படைப்பாளி...அக்காலத்திய காதலில் ஒரு கண்ணியம் நேர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு.....என பல கூறுகள் இருந்தன....!

ஆனால் இன்று..."மம்மி டாடி வீட்லே இல்லே " அன்றோ..."மாலைப்பொழுதின் மயக்கத்திலே..." அன்று சமூக அவலங்கள் குறைவு-எனவே காதல் ஈர்க்கப்பட்டது ...இன்று நிலைமை எப்படி...
80 - களின் தொடக்கத்தில் ஒருமுறை ஈரோடு தமிழன்பன் இப்படி எழுதினர் தொலைநோக்குப்பாரவையோடு.....
"இனி பிறக்கும் குழந்தை
ஒரு கையில் மருந்துக்குப்பியுடனும்
மறு கையில் கணணியுடனும்
கண்களில் கண்ணாடியுடனும் தான்
பிறக்கும் "
சீனக் கவிதையொன்று காதலைப்பற்றி இப்படி கூறுகிறது......
"காதல் என்பது
ஒரு பறவையைப் போன்றது
இறுக்கமாகப் பிடிக்க நினைத்தால்
மூச்சுத் திணறிவிடும்
லேசாக கையை விரித்து வைத்தால்
பறந்துப்போய்விடும் "
வாழத்தான் காதல் வேண்டும் - காதலிக்க மட்டும் வாழ்க்கை இல்லை...

மீண்டும் ச(சி)ந்திப்போம்....
அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (12-Aug-12, 10:24 am)
சேர்த்தது : agan
பார்வை : 181

மேலே