என் தோழன் !

என் வாழ்வில்
விதை இல்லாமல்
முளைத்தவன்
என் வாழ்க்கைக்கு
விதை விதைத்தவன் !

என்னுடன்
பிறக்கவில்லை
என் இதயத்தில் பிறந்தான்
எனக்கு துன்பத்தில் தோள்
கொடுக்கும்போது !

என் வாழ்க்கையின்
வழிகாட்டி அவன்
அதனால்தான்
என் விழி கசியும்போது
அவனை காட்டுகிறது !

அவன்
எனக்காக குருதியும் சிந்தினான்
துன்ப கடலினும் நீந்தினான்
அவன்தான் என் இருவிழியிலும்
நீந்துகிறான் !

என் இருவிழியிலும்
உன் இருவிழி வைத்தாய்
துன்பம் கண்ட என் இதயத்தை
உன் இதயத்தால் இன்பம்
காணக் வைத்தாய் !

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (13-Aug-12, 4:30 pm)
பார்வை : 547

மேலே