பேசுவது கிளியா !

செல் போனில் பேசியபடி சாலையில்
நடந்து கொண்டிருந்தாள் நீல நிற ஜீன்சும் பிங்க்
நிற டாப்பும் அணிந்த அந்த அழகான பெண்.

எதிரே வந்தான் ஒரு இளைஞன்.

"இன்னிக்கு என்ன நரி முகத்தல முழிச்சமா ...?
பச்சை மலை கிளியா ஆந்த்ரா கிளியா இல்லே
வட நாட்டுக் கிளியா ? அய்யோ என்ன பிகருடா ...
ராஜா நீ கொடுத்து வச்சவன்டா ஜமாயி" என்று
நடையை வேகமாக்கி அவள் இடையில்
ஒரு இடி இடித்து விட்டு தெரியாதது
போல் முன்னே நடந்தான்

"சுமி அப்பறம் பேசறேண்டி இங்க ஒரு விசிட்டர் "
என்று செல் போனை பாக்கெட்டில் வைத்தவாறே
அவனைப் பார்த்து திரும்பினாள்

"என்னாடி லுக் விடற நீ என்னமோ போன்ல
பேசிகிட்டே போற நா வேகமா வந்த்ததுல
தெரியாம பட்டிடுச்சு ...வலிக்குதா முதலுதவி
வேணுமா கண்ணம்மா ?"

"அதில்லடா கண்ணாளா ...நீ இடிச்ச இடியில
நெஞ்சமெல்லாம் ரோஜாப் பூ முள் இல்லாம
பொழியுதடா அந்தக் கையைக் கொடுடா
அதில் நான் முத்தமிட வேண்டும்" என்று சொல்லி
அவன் கையை பிடித்து இழுத்து ஒரு முறுக்கு
முறுக்கி காலில் ஒரு கிக் விடடாள்.

ஐயோ அம்மான்னு அலறிகிட்டு கீழே விழுந்தான்

"பித்தளை கம்பி மாறி முறுக்கிப் பிட்டையே
ஐ ....யோ ம்மா குஸ்தி வாத்தியார் பொண்ணா நீ ?
அம்மா ...என்னா வலிடா வாழத் தண்டு கையா
இல்ல ...வஜ்ராயிதமா ? அக்கா...ஆ ஆ ..

"என்னடா டயலாக்கு மாறுது ..கராத்தே ப்ளாக்
பெல்டுடா என் மன்மத ராசா ..மத்தியப் பிரதேசத்
தில ஒரு கிக் விட்டேன்னா ஜென்டரே மாறிப்
போயிடும் தெரிஞ்சுக்க "

"வேண்டாம் தாயி ஏடா கூடமா ஏதாவது
பண்ணிப் புடாத மன்னிச்சுரு அக்கா ...ஆ ஆ ...
ரெண்டு கையையும் சேர்த்து கும்பிடகூட
முடியல"

"நான் கையை புடிச்சு தூக்கட்டுமா ?

"ஐயோ வேண்டாம் தாயி மகராசி ....நானே
எழுந்துச்சுக்கறேன்" என்று எழுந்து சமாளித்துக்
கொண்டு நின்றான்

"என்ன த்காறாரு இங்கன்னு" ஒரு போலீஸ் காரர்
வந்தார்

"காவல் துறையா சார் இந்த அநியாயத்த கேளுங்க
சார் டைம் என்னன்னு கேட்டேன் எனாடா
கையிலா வாட்ச்சு கட்டிக்கிட்டு டைமா கேக்குதே
வம்புதானேன்னு இந்த அடி அடிச்சப் புடுத்து
பாருங்க சார் கைய ...இந்த பொண்ணுமேல ஒரு
கேஸ் புக் பண்ணுங்க சார் "

"என்னடா மறுபடியும் டயலாக்கையே மாத்தறான் "

'' புக் பண்ணுவோம் சார் ஸ்டேஷனுக்கு போலாமா
ஏலே இங்க நடந்ததெல்லாம் முதல் காட்சி
யிலேர்ந்தே பாத்துக்கிட்டு வாரேண்டா
விட்டேன்ன ஒன்னு ....பழைய எம்ஜியார்
பாட்டு கேட்டிருக்கியா ?
"பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசியின் மொழியா"
இது கை பேசும் கிளி புரிஞ்சுதா ?டைம் கேட்டானாம் டைம் அதோ அந்தாக்ல மரத்தடியில ஒக்காந்து கிளி ஜோசியம் பாக்கான் பாரு
அவேன்கிட்ட போ ஒனக்கு டைம் எப்படி இருக்குதுன்னு பாத்து சொல்லுவான் ...இப்படி
நெளிச்சுக்கிட்டே போனேன்னா உன்னப் பாத்து
பேசற கிளி பாத்து சிரிக்கப் போவுது ...போலே "

"மேடம் என்ன IT துறையா வங்கியா ?"
என்று கேட்டார் போலிஸ் .

"இல்லை சார் உங்க துறைதான் "

"என்ன காவல் துறையா !"

"பாரதி கல்பனா "----என்றாள்

"பாரதி கல்பனாவா ? " என்று நிமிர்ந்து நின்று
சல்யூட் அடித்தார் கடமை மிக்க போலீஸ்காரர்.

WE OBSERVE THINGS ON THE WAY
BUT THEY DEAL WITH SITIUATION IN THEIR
OWN WAY .

அவர்கள்

"நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் ...."
கொண்ட பாரதியின் வழித் தோன்றல்கள்
பாரதத்தின் பாதையெல்லாம் நடப்பவர்கள்.

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-12, 10:38 am)
பார்வை : 458

மேலே