பாவம் எஜமான்

ஒரு உண்மை கதை சொல் கிறேன் ....

" தான் அமர்த்திய வேலைக்காரன்
தனக்கே வேலை செய்யாமல் போகிறான்
தயங்கியவாறே கொஞ்சுகிறான் எஜாமான்
வேலையை செய்யணும் என்றால் ஏதாவது பணம் கொடு என்கிறான் வேலைக்காரன் - மாதச் சம்பளம்
தரு கிறே னே என்றான் பாவமாய் -
என்னய்யா எதிர்த்து பேசுகிறாய்
என்று வேலைக்காரன் கோபமாய் கத்தினான்
' என்னை தவிர உனக்கு யார் வேலை செய்ய போகிறார்கள் .....மரியாதையாக எனக்கு அடங்கி நட " என்று மிரட்டினான் ...
என்ன செய்வது என்று எஜமான்
அழுகிறார் ....எதிர்த்து கேட்க முடியாதா ?! ...
இவன் என்னால் தேர்வு செய்யப்பட்டவன்
என்ன செய்ய !.....என்று மனதுக்குள் புலம்புகிறான் அந்த எஜமான் ....பாவம்
இன்னும் இந்த கூத்து தொடர்கிறது .........
என்ன ! அந்த எஜமானை நினைத்து
எள்ளி நகை யாடுகிரர்களா !
இன்னும் சத்தமாக சிரியுங்கள்
அந்த எஜமானை பார்க்க விருப்பமா ?
எழுந்து போயி கண்ணாடியை பாருங்கள் .....
அங்கு தெரிவார்கள் அந்த எஜமானர்கள் .....

உங்கள் சேவகர்களை தெரியுமா ?
அரசியல் வாதிகள் ..........
இப்போது அந்த எஜமானர்களை நினைத்து
சிரியுங்கள்.......
சிரியுங்கள்.............
இன்னும் சத்தமாக சிரியுங்கள்

எழுதியவர் : அகரா (21-Aug-12, 12:36 pm)
பார்வை : 442

மேலே