நிலா...

இரவு மொட்டை மாடியில் அமர்ந்து நிலாவை உற்று பார்த்தேன்... நிலா... எந்தனை அழகு... எவ்வளவு குளுமை ...என்ன இனிமை... என் தினேஷை போலா... சில நொடி என் நிலாவோடு ஒன்றிபோனேன்.

அன்று முதல், என் செல் போனில் உன் பெயரை நிலா என மாற்றி பதிவு செய்து கொண்டேன்...

நிலா... வானம், காற்று.. மழை...
நிலாவே வா... என நிலா பாடல்களோடு ஒன்றிவிட்டு கனவோடு லாபித்திருந்தேன்...

செல் போன் சிளிங்கி, என் கனவை கலைத்தது... செல்லம் நூறாயிசு டா உன்ன பத்திதான் நெனசிடு இருந்தேன் நீயே கால் பண்ணிட டா ...

அப்டியா செல்லம்... என்ன நெனச்சா?
ஏதோ நெனச்சேன்... அதெல்லாம் சொல்ல முடியாது...
சரி... சாப்டியா... டி
இல்ல டா... உன்கிட்ட பேசிடு சாப்டலாம்னு வெயிட் பண்ணேன்...
அப்புறம் வேற என்ன டி... நம் உரையாடல் நீண்டு கொண்டே போனது... பிடித்த நடிகர், படம், பாடல், நகைசுவை என் பலவற்றை பேசியும் முடிவில்லாமல் பேசிய வற்றையே பல முறை பேசினோம்...

டேய் போதும் டா. எவ்ள நேரம் பேசுவ, பசிகிது டா ...
செல்லம் கொஞ்ச நேரம் பேசு டி...
டேய் போடா மார்னிங் பேசு... ஓகே...
போடி... போடி... நல்ல சாப்டு என்று செல்லமாய் கோபித்து கொண்டு போனை துண்டித்தாய்...

படுக்கையில் விழுந்து, வராத உறக்கத்தை வரவைக்க புரண்டு புரண்டு படுத்தேன்... உறக்கத்திலும் தட்டி எழுப்பியது உன் நினைவு... எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும் உன்னை வட்டமிடுகிறதே என் மனம் இதற்கு பெயர்தான் காதலா?
என்னை போலவே நீயும் காதல் வயப்பட்டு இருக்கிறாய், ஆனால் மறைக்கிறாய்...
எப்போது சொல்வாய் என் மீதான காதலை...
மாதங்கள் பல கடந்தன... இன்னும் உன் மனதை திறக்க மனம் வரவில்லையா?
ப்ளீஸ், சொல்லுடா ஐ லவ் யூ- னு.

ஒரு நாள் உனக்கும் எனக்கும் சிறிய சண்டை, அன்று வழக்கத்தைவிட அதிகமாகவே திட்டி தீர்த்து விட்டாய்...
ஏன் டா இப்டி திட்றா?
எது கேட்டாலும் கோவமவே பேசுற என்ன ஆச்சிட உனக்கு?

ஆமாம்... நீ சொல்றதுக்கெல்லாம் தலையட்டிடு கூஜா தூக்கிடு உன் பின்னாடியே திரியனுமா வேற வேல இல்ல எனக்கு...

ஏன், டா இப்டி பேசுறா...
நா இபோ என்ன சொல்லிட்டேன், வர வர உனக்கு என்ன பாத்தாலே பிடிக்கிறது இல்ல... என்று கேட்டபோதே என் கண்களில் கண்ணீர் பீரிட்டு கொட்டியது... போதும், நீலிக்கண்ணீர் வடிக்காதே என்றாய்...

என் மனதின் பதைபதைப்பு, என்னை விட்டு சென்று விடுவாயோ என்ற பதற்றத்தில்ஆற்பரித்து கொட்டும் அழுகை உனக்கு எப்படி நீலிக்கண்ணீராக தெரிகிறது...

அன்று முதல், நீ என்னிடம் சரியாக பேசுவதில்லை, ஏனோ ஒப்புக்கு பேசுவது போல பேசுகிறாய்...
என்ன ஆச்சி இவனுக்கு, ஏன் இப்டி மாறிடன்...
உன்னிடம் கேட்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல்
எத்தனையோ இரவுகளில் உறக்கத்தை தொலைத்து இருக்கிறேன்.

திடீரென ஒரு நாள், அப்பா ஒரு பொண்ணு பாத்து இருக்காரு கட்டுன அந்த பொண்ணதான் கட்டணுமாம்... பொண்ணு சுமாராதான் இருக்கு ...
என்ன இருந்தாலும் உன் அளவுக்கு வருமா செல்லம் என்றாய்...

அப்போதுதான் புரிந்தது i am just time pass என்று.

ஒரு பிணத்தையா காதலித்து ஏன் தவறு...

அழுவேன் என்று நினைக்காதே...
பாறையில் நீர் கசியாது?

எழுதியவர் : ஜெயதேவி (22-Aug-12, 9:01 am)
Tanglish : nila
பார்வை : 603

மேலே