வட்டியை சாடும் அல்-குர் ஆன்

பெரும் பாவங்களில்
வட்டியும் ஒன்று
வட்டி வாங்காமல் இருத்தலே
மிக மிக நன்று.!

வாங்கியோர் மீள முடிவதில்லை
கொடுத்தவர் ஆள முடிவதில்லை

உதிரம் உறிஞ்சும்
அட்டைப் பூச்சியை விடவும்
உழைப்பை உறிஞ்சும்
வட்டி மிகக் கொடுமையானது
அதற்கு
தண்டணையோ
மிக மிகக் கடுமையானது

ஏழ்மையை ஏமாற்றும் வட்டி
எந்த வகையிலும் நியாயமாகாது

வறுமையை சுரண்டி
வாயில் போடும்
வட்டியால் வரும்
வசதி நிலைக்காது

வட்டியினால் குட்டி போட்ட
செல்வங்கள் அழிக்கப்படும்

பிச்சையிலும் கேவலம்
எச்சையெனும் வட்டி

வட்டி வாங்கி
வயிறு புடைத்தவன்
மறுமையில்
பைத்தியக் காரனாக
எழுப்பப் படுவான்

அன்றியும்
வட்டிக்கு கணக்கு எழுதியோர்
வட்டிக்கு சாட்சி பகன்றோருக்கும்
இந்த பாவத்தில் பங்குண்டு

பணத்தின் விபச்சாரம்
இந்த வட்டி

வட்டியெனும் மாபாவத்துக்கு
தொண்ணூற்று ஒண்பது வாசல்கள்
அதில் மிகவும் கேவலமானது
தாயுடன் விபச்சாரம் செய்தது போன்றது
இந்த வட்டி

தெரியாமல் செய்யும்
பாவமல்ல இந்த வட்டி
நன்கு திட்டமிட்டு தெரிந்தே
செய்கின்ற மாபாதகம்

பாவமென்று தெரிந்தும்
வட்டி குட்டி போடுமென்று
நினைத்தால்..
குட்டி போடுவது பாவங்கள் தான்

வட்டியால்
ஏழை மேலும்
ஏழையாகிறான்

வட்டி வாங்குபவனோ
உழைப்பை மறந்து
சோம்பேறியாகிறான்

உழைப்பை ஊக்கப் படுத்தி
பாவத்தை வண்மையாக
கண்டிக்கிறது அல்-குர் ஆன்

இப்படியொரு இழிவான பாவத்தை
செய்யத்தான் வேண்டுமா?

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (24-Aug-12, 10:32 am)
பார்வை : 316

மேலே