பிறந்தநாள் திருவிழா

தாயின் கருப்பையில் தனியாய் இருந்தபோது கிடைத்த சந்தோஷம் கூட தரணியில் வந்தபோது கிடைக்காத பலருக்காக உன் பிறந்தநாள் பொழுது விடியட்டுமே இன்று..........!!!!!!

உன்னோடு சேர்ந்து உன் பிறந்தநாளை கொண்டாட உனக்குதான் எத்தனை எத்தனை தம்பிகள் தங்கைகள் உண்மையிலேயே சொல்கிறேன் அவர்களை விட நீதான் அதிர்ஷ்டசாலி இன்றைக்கு.......!!!!!!!!!!

ஒவ்வொரு வருடமும் நம்மால் இயன்றதை உடலால் ஊனமுற்றோருக்கு
கொடுத்து நம் மனதின் ஊனத்தை குறைதிடுவோமே.........!!!!!!!!

உன் நாளைய உதயம் உதிர்ந்த பூக்களுக்கு பன்னீர்
தெளிக்கவிட்டாலும்
துளிர் விடும் இலைகளுக்கு தண்ணீரையாவது தெளிக்கட்டுமே ,அவர்களின் கண்ணீரை துடைக்கும் விரலாய் இன்று முதல் பூக்கட்டுமே.....!!!!!!!!!

இந்த பிறந்தநாள் மட்டும் அல்ல இனி உன் வாழ்வில் நீ காணும் ஒவ்வொரு நாளும் உனக்கும் உன்னை சுற்றி இருப்பவருக்கும்
திருவிழாவாய் அமையட்டுமே .....!!!!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!

இப்படிக்கு ,

சிநேகமுடன் சிநேகிதி

எழுதியவர் : செர்லின் (24-Aug-12, 10:52 am)
பார்வை : 520

மேலே