அவள்
ஆடிவந்த தென்றலுடன் கரைந்துவந்த
காட்டாற்றின் சலசலப்பினுள்ளும்,
நடைபயின்று ஆடின ஜடையினையும்,
அது தடவித் தழுவின உன் இடையினையும்,
இதழ் சிந்தி சிதறிய உன் ஆழ்மனச் சந்தோசச் சிரிப்பினையும்,
எல்லா உணவையும் விரும்பிச் சுவைக்கும் உன் நாவினையும்,
விட்டேரிந்துச் சுற்றிச் சுழலும் உன் அழகிய விரல்களைப்பெற்ற உன் கரங்களையும்,
அங்கு குழுங்கிக்கிடக்கும் உன் ........ களையும், மூளையின் ஓரங்களில் வைத்துப்பூஜித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அந்தக் கணத்த காட்டின் கதவினுள் நுழைந்து கவிதை குடிக்கமாட்டோமா என்று ஏங்கித்தான் தவிக்கிறேன்.

