அஞ்சாத சிங்கங்கள், தஞ்சமென வாழ்ந்திடுவாரோ !
பணம் படைத்தோர்
பதவி கண்டார், உயர்,
குணம் படைத்தோர்
கோவில் கொண்டார், நல்ல,
மனம் படைத்தோர், மக்கள்,
நெஞ்சினிலே குடியிருந்தார்,
அஞ்சாத சிங்கங்கள், பிறர்,
தஞ்சமென வாழ்ந்திடுவாரோ,
உனக்கென ஒரு வழி உண்டு,
உணர்ந்திடுவாய் தமிழா நீ!
தமிழகத்தின் பெருமைதனை,
உலகத்தார் அறிந்திடவே,
நிலை நாட்டி, புகழ் பாடு.