๑۩۞۩๑ வரம் கேட்கவா நான்? ๑۩۞۩๑

எனக்கெதிரில் ஒரு தேவதை
வரம் கேட்கவா நான்?
உன் உயிருக்குள் ஒரு
உயில் எழுதேன்
நீ எனக்கு மட்டும்
சொந்தம் என்று,
இடைவேளை இல்லாமல்
பேசிக் கொண்டிரேன்-எனக்கு
இசை என்றால் அப்படி ஆசை
சிரித்துக் கொண்டிரு போதும்
தாவரங்கள் ஒளித்தொகுப்பு
செய்யும்,
உன் இதழ்களின் வழைவுகள்
பார்த்தால் பண்பலை-பிரபஞ்சம்
தாண்டும்,
ஒருகணம் பாரேன்
கிரகணம் தூரம் போகும்,
வெளிச்சத்தையும் வெட்கத்தையும்
அணையேன்-என்னையும்
சேர்த்து,
செத்திடலாம் போல தோணுது
ஒரு முத்தம் கொடேன்.

எழுதியவர் : ரஞ்சித் (3-Sep-12, 6:49 pm)
பார்வை : 220

மேலே