அரசியல் சாசனத்தின் அவலம்

ஒளிச்சேர்க்கை
தொழிலில்
நட்டம்....
சூரியவங்கியிடம்
கடன் வாங்க
காத்திருக்கும்
தாவரவிஞ்ஞானிகள்....
இது
காலைமேகத்தின்
மறைப்பு...
அது
விவசாயின்
வியர்வை மறைப்பு.....
. . . . . . . . .
. . . . . . . . . .
நீராவிஇரயிலில்
தற்கொலைகள்-
காரணம்
வலைந்து கிடக்கும்
வானவில் தண்டவாளம்!
தீப்பிடித்த
இரயிலின் சோரம்....
. . . . . . . . . . . . . , . . . . . . . . .

புல்லின் நுனியில்
புலியின்DNA....'
சிக்கிக்கொண்டது....
பாவம்
பனித்துளிமிருகம்....
ஈழ இரத்தத்தில்
ஓர் துளி....
. . . . . . . . . . . . . . . . . . .
பூமிக்குடுவையில்
வெப்பம்....
அரசாங்கக்கடலில்
ஆழமில்லை
தவளைகளின்
தர்ணாப்போராட்டம்!
. . . . . . . . . . . . . . . . . . . .
பூமத்திய ரேகையில்
பிளவு.....
கிரானைட்பூசாரியின்
செய்வினைக்குழியில்
முழு பூசணிக்காய்....
. . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆட்டுக்கறிசுரங்கத்தில்
ஆள்கடத்தல்....
தலைக்கறியின் மேல்
கண்ணோட்டம்....
நிலக்கறியால்
பிரதமர் வீட்டில்
நில நடுக்கம்.....
பதவியின்
இறுதிச்சடங்கு....
. . . . . . . . . . . . . . . . . . .
நொண்டிநாடகத்தில்
நடிக்க
தண்டியாத்திரை....
மண்டியிட்டு
செல்ல
மத்திய அரசு தடை...
அலைக்களிப்பு....
அன்னா ஹசாரே
அடுத்த
காந்தியாகிறார்....
. . . . . . . . . . . . . . . . . . . . .
பருவமழைத்தெய்வம்
பொய்த்தது....
மந்திர பூஜைகள்
பலனில்லை.....
லோக்பால்தெய்வம்
பொய்த்தது...
அரசியல் பூஜைகள்
மெய்த்தது....
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
இராஜதிராவகம்
தடவிக்கொண்டு வரும்
ராஜபக்சே....
ஈழத்தைக்காத்த
எம்பெருமான்....
செருப்புமாலை
அணிந்து
வரவேற்க்கும்
தமிழகம்....

கிழியாத தாளில்
கிழிந்து
கிடக்கிறது
அம்பேத்கர்
எழுதிய தாள்.....

எழுதியவர் : ருத்ரா (4-Sep-12, 8:26 pm)
சேர்த்தது : ருத்ரா நாகன்
பார்வை : 208

மேலே