லப் டப் இதயம்
லப் டப், லப் டப் என துடித்த இதயங்கள்
பட், பட் , என கைவேறு , கால்வேறாக
உயிர் சிதறி விட்டனர் .
அசுரன் உயிரோடு இருந்தால் கூட
அத்தனை உயிர்களை கொன்று
குவித்திருக்க மாட்டான்
அச்சுறுத்தும் பட்டாசு வெடித்துதான்
அசுரன் தீபாவளியை கொண்டாட
கூறினானா கூறுங்கள் ?
கட்டிடத்தை நடுங்க செய்யும்
நடுவான வேடிக்கை தேவைதானா
கூறுங்கள் ?
அணுகுண்டு வெடித்து ஆயுள்
முடியும் அளவுக்கு அதிரக
வெடி மருந்து பட்டாசு தேவைதானா ?
இது என்ன போர்களமா
வித விதமாக ராக்கெட் கண்டுபிடித்து
தீவிரவாதி போல கொன்று குவிக்க
மத விழாக்களா வானவேடிக்கை
அரசு விழாக்களா வானவேடிக்கை
திருமண விழாக்களா வானவேடிக்கை
பாடையில் போகும்போது பட்டாசு தேவையா?
சிந்திங்கள் மக்களே !
அதி ரக வெடிமருந்து பட்டாசுகளை
உதறி தள்ளுங்கள் ! இல்லையேல்
நாமும் ஒருநாள் வெடித்து செய்தருவோம்
இவர்கள் போல !
எல்லா தொழில்களிலும் விபத்துக்கள் உண்டு
இல்லை என்று கூறவில்லை , நம்
தேவை கருதி அவர்கள் - அதிரக
வெடி மருந்துகள் தயார் செய்ய வைக்காதீர்கள்
என்றுதான் கூறுகிறேன் !
..................கண்ணீருடன் .....................! ! !

