காதல்...
உன்னைப்பற்றி கவிதை எழுத
அதிகம் யோசிப்பதனாலோ ஏனோ
கற்பனையை விட
உன் மேல் காதல் வளர்கிறது
என்னுள்..
..........................................................................
உன்னைப் பற்றிய கனவுகளில்
கல்லூரி நோட்டு புத்தகங்களின்
கடைசிப் பக்கங்கள் நிரப்பிய கவிதைகள்
இன்று விற்பனைக்காக
பழைய பேப்பர் கடையில்!!
......................................................................................
உறங்காத நம் இரவுகளில்
நிம்மதியான உறக்கத்தில்
நாம் தொலைத்த
காதல் மட்டும்!!