நம் சென்னை

அனைவரையும் அரவணைக்கும்
அன்னை...
நம் சென்னை...
பலரும் படமெடுக்கும்
எண்ணத்தில்
படையெடுக்கும் இடம்
நம் சென்னை...
சிலரது வெற்றிகளையும்
பலரது தோல்விகளையும்
பார்த்த அன்னை
நம் சென்னை...
பிற ஜாதி பெண் மீது
காதல் கொண்டு
பிறர் அறியா
ஓடும் இடம்
சென்னை...
தென் மாவட்டங்களையும்
வட மாநிலங்களையும்
வாழவைக்கும் இடம்
நம் சென்னை...
என்னை போன்ற அனாதைகளுக்கு
ஆசிரமம்
நம் சென்னை...
அனைவரையும் அரவணைக்கும்
அன்னை...
நம் சென்னை...

எழுதியவர் : சிவானந்தம் (8-Sep-12, 11:43 pm)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : nam chennai
பார்வை : 1672

மேலே