அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்தில் உள்ளதையெல்லாம்,
ஊழல் செய்து விழுங்கிவிட
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத்
தூற்றி வழக்கு போட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
லஞ்சம் வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம்
சுரண்டும அரசியல் செய்தபோதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதராயினும்
லட்சம்கோடி லஞ்சம் வாங்க
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து
லஞ்சமென்றே ஊட்டும் போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.
காவற்படைகள் இங்கே
கைதுசெய்த போதிலும்,
நீதிபதிகள் உடனே
ஜாமின் தருவார் என்பதாலே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
லட்சியம் கொண்டிங்கு
லஞ்சம் வாங்க என்றும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.
(பாரதி! என்னை மன்னிப்பீராக!)