நடப்பதெல்லாம் நஷ்டம்தான்!

உச்சி வெயிலில்
ஊர் சுற்றி நின்ற போது,
எச்சில் முழுங்கி..
ஏகமாய் கோபப்பட்டார் அப்பா!
உச்சம் தொட்ட உணர்வுகள்..
இச்சை ஊட்டும் எண்ணங்கள்
எடுத்து எறிந்துவிட்டு ,
மெச்ச வேண்டாம்..
மென்மையாய் சிரித்தால் போதும்..
கச்சை கட்டும் அப்பாவின்
கனவுகள் மெய்யாக
கலப்பையை எடுத்து கொண்டு
கழனி நோக்கி நடந்த போது ,
கடைவாசலில் கண்ட அப்பா
கண்ணீருடன் சொன்னார்
வெள்ளாமை செய்ஞ்சு
விளங்காம போனதால
வாங்கின கடனுக்கு ,
வயலை வித்து போட்டேன்
மகனே
உன்னை நான் நம்பினேன்
என்னை நீ நம்பலே !
நம்பிக்கை இல்லா வாழ்வில்
நடப்பதெல்லாம் நஷ்டம்தான்!