விழிகளின் விதை

உனக்கு பின் யாரோ
உலகை காண்பாரோ ?

கருவறையில் வாங்கிய
வரம் ஒன்றை
கல்லறையில் வழங்க
முன் வருவோம்

தெருவோடு போகும்
மழை நிராய்...........

வீணாக்காமல் .........
வரம் வழங்கி -மீண்டும்
உயிர் பெறுவோம் ........

உருபெருகும் நாட்டின்
கருப்பு பணமாய்
புதைக்காமல் ............

விழிகளின் விதை வழங்கி - பிறர்
கண்மலர வழி செய்வோம்

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (15-Sep-12, 12:49 pm)
சேர்த்தது : jgmagesh
Tanglish : vizhikalin vaithai
பார்வை : 162

மேலே