நான் தொலைந்து போனேன்

என்னை நேசிக்கும்
என் உயிரின்
அழகில் .........தொலைந்து போனேன்.

என்னை உலகிற்கு தந்த
என் தாயின்
அன்பில் .......தொலைந்து போனேன்.

என் நட்பை இதயத்தில்
பொக்கிஷமாய் பாதுகாக்கும்
நண்பனின் நட்பில் ....தொலைந்து போனேன்.

என் இலக்கிய படைப்பை
காவியமாக்கி ...அதற்கு
கவிதை எழுதிய
கவிஞர்களின் எழுத்தில் ....தொலைந்து போனேன்.

மொழி தெரியா ஊரில்
வழி மறந்து விழி பிதுங்கி நின்ற போது
நேசக்கரம் நீட்டிய
அந்நிய தேச மனிதனின்
உதவியில் ..........தொலைந்து போனேன்.


படிக்காத பாமரன்
என் கவிதையை நேசித்தபோது
அவன் நேசிப்பில் .........தொலைந்து போனேன்.

நல் மனிதனாக
ஆசானாக
கவிஞராக
பன் முக வடிவம்
கொடுத்த என் குருவின்
படைப்பில் .........தொலைந்து போனேன்.

---இன்னும் தொலைந்து போக காத்திருக்கிறேன்.......

எழுதியவர் : தமிழ் சௌந்தர் (15-Sep-12, 12:45 pm)
சேர்த்தது : tamilsoundar
பார்வை : 317

சிறந்த கவிதைகள்

மேலே