நெஞ்சுக்குள்ள நெசக்காதல் வருமா அப்பா???

கெட்டி மேளம் நாதஸ்வரம்!
பட்டி தொட்டி மதி மயங்க!
எட்டு ஜில்லா கூட்டி ஒரு!
சிட்டுக்கு கல்யாணம்!

சீமத்து தொரயல்லவோ!
சீமாட்டி மயங்கி நின்னா!
சீர்வரிசை லிஸ்ட பாத்து!
சீக்கிரமாய் பயந்தும் போனா!

பொண்ணாக பொறந்து விட்டா!
பொன் கொடுத்து அனுப்ப வேணும்!
பொருளும் நாங்க தரணுமம்மா!
பொறந்த வீட்டார் சொன்ன போது!
பொசுக்குன்னு தலய ஆட்டிப்புட்டா சீதேவி!

நாளும் பாத்து நட்சத்திரம்!
நல்ல ஜோஸியம் எல்லாம் பாத்து!
நடந்ததந்த நிச்சயம்!
நலுங்கும் கூட முடிஞ்சி போச்சி!

நஞ்சை ஒரு தோப்பும் விற்று!
புஞ்சை ஒரு தோப்பும் விற்று!
செஞ்சாங்கம்மா சீர்வரிசை!
கொஞ்ச பணம் கொறஞ்சி போச்சி!

கல்யாண நாளில் அன்று!
கையில் தாலி எடுத்து விட்டு!
காது கடித்தான் மாப்பிள்ளை!
கண்ணில காசு காட்ட சொல்லி!

எல்லா பிரச்சனையும் தீர்த்து தங்கள்!
செல்ல மகல் கல்யாணம்!
நல்லதாக நடக்கயில!
மெல்லியதை கண்ணீர் வந்து!
எள்ளி நகையாடுமையா!

புகுந்த வீடு போயிருக்கா!
புதுமண தம்பதியாம்!
புள்ளைக்கொரு நல்ல வாழ்வின்னு!
பொறந்த வீட்டார் நெனக்கயில!

பெட்டியொரு கையிலயும்!
குட்டியொரு கையிலயும்!
கட்டிக்கிட்ட மாப்பிள்ளைய!
வெட்டிக்கிட்டு வந்து நின்னா!

சின்ன புள்ள உடல் முழுதும்!
சிகரட்டால சுட்டிருக்கு!
சிரிச்ச முகம் வதங்கி கண்ணீர்!
கரிச்ச முகம் ஆயிருக்கு!

எந்த நாளும் ஏதோ ஒரு!
கந்தர்வன சாட்டுறானாம்!
உன் நடத்தையில பிழை!
என்று சொல்லி கூத்தியால தேடுறானாம்!

குடிப்பதற்கு காசு மட்டும்!
குடுக்க நான் வேணுமப்பா!
பசிச்ச புள்ள அழுகையில!
பால் காசும் புடுங்கி போறான்!

வசதியான மாப்பிள்ளை என்று தானே!
வழிநெடுக சொன்னிங்க அப்பா!
மோகமது தீர்ந்த பின்னே!
மோதல் வந்து தாக்குதப்பா!

கண் என்றான்! மணி என்றான்!
காதல் என்று நான் நினைத்தேன்!
காமவெறி பிடிச்ச அவன்!
நெஞ்சுக்குள்ள நெசக்காதல் வருமா அப்பா???

எழுதியவர் : அச்சலா (16-Sep-12, 11:33 am)
பார்வை : 240

மேலே