காதலிக்க தெரிந்த கலைஞன்:

மௌனத்தின் சத்தம்
காதினை வருடும் !
இருளின் ஒளி
கண்ணை பறிக்கும் !!
நிலவின் சூடு
உடலை வாட்டும் !!!
கதிரின் குளிர்
மூச்சை உறைய வைக்கும் !!!!
முகிலின் வண்ணம்
வானத்தின் அழகை காட்டும் !!!!!
காதல் வந்தால் இந்த
முரண்பாடுகள் எல்லாம்,
முரண்பாடே இன்றி,
இதமாய் இதயம் கொன்று தின்னும் !!!
சாவின் மடியில் இதயம் தரும்,
நானும் ஒரு இளைஞன் !!!
காதலிக்க தெரிந்த கலைஞன் !!!!