தினங்கள் துளிகளாக ! - கே.எஸ்.கலை
‘குடி’மக்கள்
கொந்தளித்து குமுறுகிறார்கள்
மது ஒழிப்புத் தினம் !?
•
புத்தாடை பரிசளிப்பு
குழந்தை தொழிலாளிகளுக்கு
சிறுவர் தினம் !?
•
முதியோர் இல்லங்களில்
விமரிசையாய் வைபவங்கள்
முதியோர் தினம் !?
•
மூடிய கதவுகளுக்குள்
வியர்வை சிந்தும் தொழிலாளிகள்
மே தினம் !?
•
முட்கம்பி வேலிகளுக்குள்
பொது மக்களின் கரகோஷ சத்தங்கள்
சுதந்திர தினம் !?

