என் உயிரான அவள் நினைவுகள்...

என் கண்களின் கருவிழி ரசித்த அவளை
என் இதயத்தின் கருவறையில் வைத்தேன்...

இன்று
என் இதயம்மட்டும் காணும் அவளை
என் விழிகள் காண தவிக்கிறது...

என் இதயத்தை
படுத்தும் அவள் நினைவுகளால்
என் கண்கள்
கண்ணீர் வடிக்கிறது
ஏனெனில்
இதயம் வடிக்கும் செந்நீரை துடைக்க
கண்கள் வடிக்கும் கண்ணீரால் தானே முடியும்...

காதலுக்கு கண்கள் இல்லை என்பது பொய்
உண்மையெனில்
இதயத்தின் இறுக்கத்தை இலகச்செய்ய
துணையின்றி போயிருக்குமே...

ஒவ்வொரு முறையும் - என்
உயிரை துறக்க நினைக்கும்போதெல்லாம்
தோற்றுப்போய் நிற்கிறேன் -என்
உடலைவிட்டு - அவள்
நினைவுகள் பிரிந்துவிடும் என்பதற்காக...

என்
இதயத்தை வாட்டும் அவள் நினைவுகளை
விளக்க நினைக்கும்போதெல்லாம்
விலகி நிற்கிறது என் உடலைவிட்டு
அவள் நினைவுகள் அல்ல
என் உயிர்...

எழுதியவர் : சிலம்பரசன்.ச (25-Sep-12, 7:36 pm)
சேர்த்தது : silambhu
பார்வை : 402

மேலே