விடைபெறுகிறேன்
திடீரென வாழ்வில் முளைத்தாய்
நான் உன்னை மட்டுமே நினைக்கச் செய்தாய்
அறியாப்பிள்ளை
உன்னில் மயங்கி நானும் கோவலன் ஆனேன் !
மனம் திருந்தி கண்ணகியை தேடிய போது
அவள் இருந்த சுவடே இல்லை !
இது
புது சிலப்பதிகாரம் போலும்
கண்ணகி மரித்தப்பின் கோவலன் கோபப்படுகிறான் !
விடைபெறுகிறேன் " கோக்கே , பெப்சியே "