இன்று எழுத்தில் – கே.எஸ்.கலை

தத்தெடுத்த வரிகளுக்கு
பெற்றெடுத்த உரிமை
பேசுகிறார்கள் !

இலக்கங்கள் இலக்கியத்தை
அடையாளப் படுத்திக்
கொண்டிருக்கின்றது !

கவிதைகளில் சமத்துவம்-ஆனால்
சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்
கவிஞர்கள் !

குற்றம் இருப்பதை
சுட்டிக் காட்டினால் அவன் தான்
குற்றவாளி !

தட்டச்சில் பதிக்கும்
முதல் வார்த்தையே -நான்
நல்ல கவிஞன் !

தீண்டுவாரில்லாமல்
முதிர் கன்னிகளாய்
நல்ல படைப்புக்கள் !

விரசமில்லா கவிதைகள்
ஆனால் - விடுகையில் மட்டும்
சல்லாபம் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (27-Sep-12, 4:34 pm)
பார்வை : 332

மேலே