ருத்ரன்

ஜகமாழும் அரசன்
திருநீலகண்டன்
உமையவளின் அணைப்பில்
அக்னி குண்டம் இறங்கும் மர்மயோகி
தலையிலே கங்கை
கழுத்திலே பாம்பு
இடுப்பிலே புலித்தோல்
மயானத்தில் வாழ்வு
ஆதி வெட்டியான்
ஈசன் என்றானான்
சடலம் வரும்
இடைவெளியில்
யோகம் பயின்றான்
அக்கணம் முதல்
ஆதிகுரு என்றானான்
ரிஷிகளும் தேடுவர்
மாமுனிவர்களும் பாடுவர்
இடுகாட்டில் வாழ்பவனை
பிசாசுகளின் தலைவனை
கபாலமூர்த்தி என்றழைத்தார்கள்
நெற்றிக் கண்ணால் சுட்டெரிப்பான்
சூலத்தால் சம்ஹாரம் செய்வான்
சக்தி அருகில் வந்தால்
சாந்தம் அடைந்திடுவான்
ஆதியிலே இருந்தான்
சிவாலயங்களில் புகுந்தான்.