நிறைவு கொள் !

படைப்புகளில் குறை அறிந்து
தவறுகளை சுட்டிக்காட்டு

திருத்தி கொள்வார் படைப்பாளி
தவறுக்கு மனம் வருந்தி

விமர்சனம் செய்து இங்கே
பேர் வாங்கும் பல நண்பருண்டு

இயல்பாக இவர்களுக்கு அவர்தம்
திறமையில் நம்பிக்கை இல்லை

விமர்சனம் செய்வதில் முறையாக - நல்ல
கோட்பாடும் இவர் அறிந்ததில்லை

குற்றங்களை ஆராய்வதிலே இங்கே
குறுக்கு மூளை தனக்கு என்று

திறமை இருக்குமானால் யாரும் - நல்ல
படைப்புகளை பகிர்ந்திடலாம்

குற்றம் கூறி பெயர் வாங்கும் - நல்ல
பொன்னான நேரத்தை சேமிப்போம்

நிறைவு கொள் !

குறிப்பு

எழுத்து.காம் இல் சமீபகாலமாக படைப்பாளிகளின் படைப்புகளை
விமர்சனம் செய்வது நாகரீக மற்ற வார்த்தைகளை உபயோகிப்பது கண்டிக்க தக்கது .

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (1-Oct-12, 12:06 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 143

மேலே