"குவா" "குவா"..

"குவா" "குவா"..
=====================================ருத்ரா

உயிரின் முதல்
ஒலிப்பதிவு
"குவா குவா" வை
உற்றுக்கேளுங்கள்.

அதுவே
விஞ்ஞானிகளையே கூட‌
மிரள வைக்கும்
"குவா"ண்டம் மெகானிக்ஸ்.

அதன் அதிர்வு எண்கள்
நம்பிக்கையின்
அலைப்ப‌டிவ‌ங்க‌ள்.
அது அழுகை அல்ல‌.
ஆண்ட‌வ‌ர்க‌ள் எல்லோருமே
ஒன்று சேர்ந்து ந‌ட‌த்தும்
தொழுகை அது.

அரிதிலும் அரிதான‌
அந்த மானிட‌ப்பூவே
ஆண்ட‌வ‌ர்க‌ளின் விய‌ப்பு.
ஆண்டவர்களுக்கே ஒரு ஆண்டவராய்

விள‌ங்காத‌ சூத்திர‌க்க‌யிறான‌
டி.என்.ஏ..ஆர்.என்.ஏ வை
வைத்துக்கொண்டு
இந்த‌ பிஞ்சு பிர‌ப‌ஞ்ச‌ம்
ந‌ம‌க்கு என்ன‌ வேத‌ம்
சொல்ல‌ப்போகிற‌தோ
என‌

அந்த‌ "இறைவ‌ன்மார்க‌ள்"
குவா குவா வில்
குர‌லெழுப்புகின்றார்க‌ள்.

ஆம்.ம‌னிதா!
இவ‌ர்க‌ளுக்கு ச‌ந்திர‌ம‌ண்ட‌ல‌த்தில்
கோயில் க‌ட்ட‌வேண்டுமென்றாலும்
அது உன்னால் தான் முடியும்.

அறிவின் கூர்மை
ந‌ம்பிக்கையாய் சுட‌ர‌
கோடி கோடி ஒளியாண்டுக‌ள‌யும் கூட‌
ஆண்டுவிட‌த்துடிக்கும்
உன் உள்விசையே
பலப்பல "குவாஸர்களையும்"
குசலம் விசாரிக்கும்
இந்த‌ "குவா" "குவா"..

========================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (1-Oct-12, 12:54 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 130

புதிய படைப்புகள்

மேலே