வறுமையின் துருவக்கோடு ...

முதலில் பையில் இருந்தது ...
அடுத்து பண்டம் பாத்திரம் ...
பின் பத்திரமும் வைத்து ...
குடித்தேன் ...
மதுக்கடையில் செல்வமும் ...
எனக்கு வறுமையும்
வந்து சேர்ந்தது ...நோயோடு ...
மூன்று காலில்
முறை சாய்ந்து நிற்கும் ...
கட்டிலில்....என்னை
முட்டு கொடுத்து கிடத்தினாள் ..
என் இனியவள் ..
முழுதும் அறியாத ..என்
முன்று வயது குழந்தையின் ..
முழுவயிறு நிரப்ப முடியாமல் ..
ஏங்கும் என் கருவிழியாளின் ...
கண்ணீர் துடைக்க....
ஏங்கும் எனக்கு..
எழவே வழியில்லை ....
விழா பல கடந்தாலும் ..
என் விலா எலும்பு ...
(எழுந்து) நின்ற பாடில்லை ...
இருட்டோடு
சேர்ந்த கவலைகள் ...
அவளை
இன்றும் கொன்றது ....
என்னவோ
முடிவெடுத்தால் போல ..
வழிந்து
காய்ந்த கண்ணீரை ...
கைகளால்
கலட்டி போட்டு ...
எழுந்து சென்று
என்னை கதவுகளில் பூட்டி...
எங்கோ சென்றால்
நான் என்ன என்பதற்குள் ...
ஆள் நடமாட்ட
வேலையில் சென்று ..
நாய் நடமாட்ட
வேளையில் வந்தால் ..
பார்த்து
பல நாள் ஆனா பணசுருட்டை ...
கைகளில்
பிதுக்கிகொண்டு ...
எதென்று என் ..
உலர்ந்த நாக்கில் ...
எச்சிலை ஊற்றி
நகட்டுவதற்குள் ..
எதேட்சையாய் சொன்னால் ..
"உனக்கு விலை கேட்காததை ...
ஊரார்க்கு விலை கேட்டு குடுத்தேன் "...