நாகரிக பெண்
பட்டு பாவடை
பளபளக்கும் தாவணி
முத்துபோல் சிரிப்பு
முகமெல்லாம் பூரிப்பு
என்று
அழகான் பருவ மங்கை
கிராமத்து வீதிகளில்
பவனி வரும்
பவுசு எங்கே ?
தலைமுடியை
பறக்கவிட்டு
தளதளக்கும்
சுடியை போட்டு
உயரத்துக்கு
ஒரு காலனி என்று
ஒய்யார நடை போட்டு
போகும்
நகரத்து
கன்னிகள் எங்கே ?
அவர்களை பார்த்தால்
கண் சிமிட்டி கொள்ளலாம்
இவர்களை பார்த்தால்
கண்பொத்தி கொள்ளலாம் !

