ஆசிரியர்

நான் இளம் வயதில் கண்ட நடமாடும் தெய்வங்கள்
எம்மை ஏற்றிவைத்த ஏணிகளுக்கு தூசுதட்டும் நாளின்று
எமக்கு வழி காட்டிய சுடர்களே
எமக்கு வழி காட்டிய விழிகளே
எமக்கு அகரம் சொன்ன சிகரம்களே
இனியன செய்வதையும் ஈகையின்
முறையினையும் உன் வழிகாட்டலால்
பிழைத்தேன் உலகில்
இனிப்பாய் கசப்பு மாத்திரைகளை
உவகையுடன் ஊட்டியவரே
அகர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே
இந்த ஆசிரியர் தினத்தை உங்கள் கால்களைத்
தொட்டு வணங்க நினைத்தேன்

எழுதியவர் : அற்புதன் (6-Oct-12, 12:31 am)
சேர்த்தது : அற்புதன்
பார்வை : 198

சிறந்த கவிதைகள்

மேலே